உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

வால்பாறை;வால்பாறையில், பெய்யும் கனமழையினால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.வால்பாறையில், தென்மேற்குப்பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், பி.ஏ.பி., திட்ட முக்கிய அணைகளான சோலையாறு, ஆழியாறு ஆகிய இரு அணைகளும் நிரம்பியுள்ளன.தொடர் மழையால் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து, நீர்வரத்து அதிகரித்துள்ளதோடு, அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.வால்பாறையில் நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாது பெய்யும் கனமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கபட்டுள்ளது. காற்றுடன் கூடிய கனமழை பெய்வதால், பல்வேறு இடங்களில் மண் சரிந்தும், மரம் விழுந்தும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 161.47 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 2,566 கனஅடி தண்ணீர் வரத்காக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 2,444 கனஅடி வீதம், பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 49.03 அடியாக உயர்ந்தது.நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,):வால்பாறை - 33, சோலையாறு - 30, பரம்பிக்குளம் - 24, ஆழியாறு - 9, மேல்நீராறு - 57, கீழ்நிராறு - 48, காடம்பாறை - 14, மேல்ஆழியாறு - 3, சர்க்கார்பதி - 25, வேட்டைக்காரன்புதுார் - 11, மணக்கடவு - 11, துணக்கடவு - 29, பெருவாரிப்பள்ளம் - 35, நவமலை - 5, பொள்ளாச்சி - 13 என்ற அளவில் மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ