உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அக்ரஹார சாமக்குளத்துக்கு நீர்வரத்து அதிகரிப்பு

அக்ரஹார சாமக்குளத்துக்கு நீர்வரத்து அதிகரிப்பு

அன்னுார்:அன்னுார் அருகே அக்ரஹார சாமக்குளம் ஏரியின் நீர் பாதைகள் அண்மையில் புனரமைப்பு செய்யப்பட்டன. இதனால் ஏரிக்கு மழையின் காரணமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கோவை மாவட்டம் அன்னுாரில் எஸ்.எஸ். குளம் ஓன்றியத்திற்குட்பட்ட பகுதியில் அக்ரஹார சாமக்குளம் ஏரி 165 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியை சுற்றி பல்வேறு இடங்களில் வாழை, தென்னை, சோளம் போன்றவைகள் பயிரிடப்பட்டுள்ளன.இந்த ஏரியில் அரசு அனுமதியுடன், கவுசிகா நீர்கரங்கள் வழிகாட்டுதல் படி, தனியார் நிறுவனத்தின் சமுதாய பொறுப்பு நிதியில், குளத்தின் ஆறு நீர்வழிப் பாதைகளும் சுமார் 12 கிலோ மீட்டருக்கு, அண்மையில் புனரமைப்பு செய்யப்பட்டது.இதனால் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால், ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சுமார் 3 அடி வரை ஏரியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !