உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வனவிலங்குகளுக்கு வந்தது ஆபத்து:ஊட்டி சாலையில் ரோந்து அதிகரிப்பு

வனவிலங்குகளுக்கு வந்தது ஆபத்து:ஊட்டி சாலையில் ரோந்து அதிகரிப்பு

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில், வனவிலங்குகள் விபத்தில் சிக்காமல் இருக்க, மேட்டுப்பாளையம் வனத்துறையினர் ரோந்தை அதிகரித்துள்ளனர்.மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் ஊட்டிக்கு சுற்றுலா செல்பவர்கள், உள்ளூர் வாசிகள் என தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இச்சாலையின் இருபுறங்களிலும் அடர்ந்த வனப்பகுதி உள்ளதால், யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையை கடந்து செல்வது, வழக்கமான நிகழ்வாக உள்ளது.ஊட்டி சாலையில் ஓடந்துறைக்குட்பட்ட பகுதியில், மான் கூட்டம் அதிகமாக உலா வரும். அவ்வாறு வரும் மான்கள் அவ்வப்போது விபத்தில் சிக்குகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட, மான் ஒன்று அப்பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது, வாகனம் மோதியதில், மான் பலியானது. இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க, வனத்துறையினர் ரோந்தை அதிகரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை