உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரியில் தொழில்துறை கருத்தரங்கம்

ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரியில் தொழில்துறை கருத்தரங்கம்

கோவை:கிணத்துக்கடவு ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜி., கல்லுாரியில் 'இண்டஸ்ட்ரி கனெக்ட் 2024' என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு குறித்து கருத்தரங்கம் நடந்தது. இதில் பல பன்னாட்டு நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் பங்கேற்று 'செயற்கை நுண்ணறிவும், மாணவர்களுக்கு அதில் உள்ள வாய்ப்புக்களும்' என்ற தலைப்பில் பேசினர். இதில், மைக்ரோசாப்ட், சிஸ்கோ, தாட்ஒர்க்ஸ், டெக் மஹிந்திரா, கேடென்ஸ் டிசைன் சிஸ்டெம்ஸ், ஸ்னைடர் எலெக்ட்ரிக், மேட் ஸ்ட்ரீட் டென், செடின் டெக்னாலஜீஸ், கார்போரண்டம் யூனிவெர்சல், சி.ஆர்.ஐ., பம்ப்ஸ், ஆத்யா ஏ.ஐ., போன்ற முன்னணி நிறுவனங்களில் இருந்து, 33 அதிகாரிகள் பங்கேற்று, வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பங்கள் பற்றியும், அதில் உள்ள வாய்ப்புக்களை பெற மாணவர்கள் தங்கள் தகுதிகளை எப்படி மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் எடுத்துரைத்தனர்.கருத்தரங்கில், கல்லுாரி முதல்வர் சுதா, தொழில்துறை நல்லுறவு டீன் கண்ணன் நரசிம்மன், கல்வித்துறை டீன் சுரேஷ், மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குனர் நந்தினி ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ