உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தாசில்தார் அலுவலகத்தில் பள்ளி மாணவர்கள் நேரில் ஆய்வு

தாசில்தார் அலுவலகத்தில் பள்ளி மாணவர்கள் நேரில் ஆய்வு

மேட்டுப்பாளையம்;தாசில்தார் அலுவலகப் பணிகளை, பள்ளி மாணவர்கள் நேரில் பார்த்து, விபரங்களை கேட்டு அறிந்தனர். மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில், வருவாய்த்துறைக்கு உட்பட்ட தாசில்தார் அலுவலகம் உள்ளது. இங்கு ஆதார் அட்டை எடுத்தல், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், பெயர் மாற்றம் செய்தல், வீட்டுமனை பட்டா விண்ணப்பித்தல், பட்டா பெயர் மாறுதல், பல்வேறு வகையான சான்றுகள் பெற விண்ணப்பம் செய்தல் ஆகிய பணிகள் நடைபெறுகின்றன. மேட்டுப்பாளையம் ஆலாங்கொம்பில் உள்ள சரஸ்வதி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும், 140 மாணவ, மாணவியர், நேற்று மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகத்திற்கு வந்தனர்.அங்கு ஒவ்வொரு அலுவலகத்திற்கு சென்று, அந்தந்த துறை அதிகாரி மற்றும் அலுவலர்களிடம், இங்கு என்னென்ன பணிகள் நடைபெறுகின்றன என, கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டனர். ரேஷன் கார்டு பிரிவு அலுவலகத்துக்கு சென்ற மாணவ, மாணவிகளை, வட்ட வழங்கல் அலுவலர் சங்கர்லால் வரவேற்றார். பின்பு அவர், ரேஷன் கார்டின் முக்கியத்துவம் குறித்து பேசினார். ரேஷன் கார்டு என்னென்ன பயன்பாட்டிற்காக பயன்படுகிறது. ரேஷன் கடைகளில் என்னென்ன பொருள்கள் வழங்கப்படுகின்றன. யாரெல்லாம் பயன் அடைகின்றனர் என்ற விவரங்களை கூறினர். இது அல்லாமல் ஆதார் அட்டை எடுத்தல், பெயர் மாற்றம் செய்தல், முதியோர் உதவித்தொகை பெற விண்ணப்பித்தல் ஆகிய விவரங்களை கேட்டு குறிப்பு எடுத்துக் கொண்டனர். அதன் பின் மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கு, அலுவலர்கள் பதில் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி