உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சின்னவெங்காயத்தில் ஊடுபயிர் சாகுபடி

சின்னவெங்காயத்தில் ஊடுபயிர் சாகுபடி

உடுமலை : சின்னவெங்காய சாகுபடியில், கூடுதல் வருவாய் பெற, ஊடுபயிராக பச்சை மிளகாயை உடுமலை வட்டார விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.உடுமலை வட்டாரத்தில், கிணற்றுப்பாசனத்துக்கு பல ஆயிரம் ஏக்கரில், காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதில், தண்ணீர் வளம் மிகுந்த பகுதிகளில் மட்டும் சின்னவெங்காயம் சாகுபடி செய்கின்றனர்.இச்சாகுபடிக்கு செலவும் அதிகமாகும். அறுவடை காலங்களில், சின்ன வெங்காயத்துக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டு விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, ஊடுபயிர் சாகுபடி செய்து வருவாயை அதிகரிக்க விவசாயிகள் புது முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.அவ்வகையில், சாளையூர் சுற்றுப்பகுதியில், சொட்டு நீர் பாசனத்தில், சின்னவெங்காயமும், ஊடுபயிராக பச்சை மிளகாயும் நடவு செய்துள்ளனர்.வீரிய ஒட்டு ரகங்களை பயன்படுத்துவதால், 90 - 110 நாட்களுக்குள், சின்னவெங்காயத்தை அறுவடை செய்து கொள்ளலாம்; பின்னர், பச்சை மிளகாயை செடிகளில் இருந்து அறுவடை செய்து விற்பனை செய்ய திட்டமிட்டு இந்த நடைமுறையை பின்பற்றியுள்ளனர்.சொட்டு நீர் பாசனத்தில், நீர் பாய்ச்சுவதால், இரு பயிர்களுக்கும் ஒரே நேரத்தில், நீர் மற்றும் உர நிர்வாகம் செய்ய முடியும்.மேட்டுப்பாத்தி அமைத்து நடவு செய்துள்ளதால், களை பயிர்களையும் எளிதாக கட்டுப்படுத்த முடிகிறது என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ