மேலும் செய்திகள்
தேனியில் ஓரா நிறுவன வைர நகை கண்காட்சி துவக்கம்
23-Feb-2025
கோவை; கோவையில், சர்வதேச ஷாப்பிங் திருவிழா கொடி சியா தொழில் கண்காட்சி வளாகத்தில் நேற்று துவங்கியது.கோவையில் ஐ அன்ட் ஈவன்ட்ஸ் சார்பில் சர்வதேச ஷாப்பிங் திருவிழா 2025 நேற்று துவங்கியது. வரும் 17ம் தேதி வரை நடக்கிறது. கண்காட்சியில், தாய்லாந்து நாட்டின் செயற்கை மலர்கள், தாய்லாந்து முத்து நகைகள், ஈரான் நாட்டு வெள்ளி நகைகள், குங்குமப்பூ, பேரிக்காய், மற்றும் கை வினை பொருட்கள் இடம் பெற்றுள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டின் உலர் பழங்கள், மலேசிய பிரேம்கள், சிங்கப்பூர் பைகள், நகைகள், மற்றும் பல பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.கண்காட்சி நடக்கும் அரங்கின் அருகிலேயே 64 வகையான பர்னிச்சர் கண்காட்சியும் நடக்கிறது. மார்ச் மாத இறுதி விற்பனையாக 70 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்படுகிறது. ஷோபா, கிச்சன், அவுட்டோர் பர்னிச்சர், கார்பெட்ஸ், குழந்தைகளுக்கான மரச் சாமான்கள், ஓவியங்கள், படுக்கை மெத்தைகள், தலையணைகள், விரிப்புகள், வீட்டு அலங்கார ஜவுளி பொருட்கள், ஆடைகள் போன்றவைகளும் இடம் பெற்றுள்ளன.கண்காட்சி காலை 10.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை வரும் 17 வரை நடக்கிறது. நுழைவு கட்டணம் 50 ரூபாய். விபரங்களுக்கு 7448767203 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
23-Feb-2025