உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குமரன் மெடிக்கல் சென்டரில்  நவீன கருவி அறிமுகம் 

குமரன் மெடிக்கல் சென்டரில்  நவீன கருவி அறிமுகம் 

கோவை : கோவை குரும்பபாளையம் குமரன் மெடிக்கல் சென்டரின், இந்திய சிகிச்சை பிரிவில் நேற்று 'ஹை டெபனிசன் இன்ட்ரா வாஸ்குலர் அல்ட்ராசவுண்ட்' கருவி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதனை, மூத்த இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் பெரியசாமி அறிமுகப்படுத்தினார். இருதய ரத்த குழாய் ஸ்டென்ட் சிகிச்சை முறையில், துல்லியத்தன்மையை இந்த கருவி உறுதிப்படுத்துகிறது. இதன் வாயிலாக, இருதய ரத்த குழாயின் தன்மை, ஸ்டென்ட் அளவு, சிகிச்சை நேர்த்தியை துல்லியமாக அறிந்துகொள்வதால், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையின் தரம் மேம்பட்டுள்ளது. புதிய நவீன கருவி அறிமுக விழாவில், குமரன் மெடிக்கல் சென்டர் தலைவர் டாக்டர் ஹரிபிரசாத், டாக்டர்கள் ஈஸ்வரன், கார்த்திக் கண்ணபிரான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை