விவசாய அடையாள அட்டை பெற அழைப்பு
அன்னுார்; வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு கிராம தங்கல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் தமிழ்நாடு திட்ட வேளாண் பல்கலைக்கழக தோட்டக்கலை மாணவிகள் எட்டு பேர் கொண்ட குழுவினர் அன்னுாரில் தோட்டக்கலை உதவி இயக்குனர் கோமதியை சந்தித்தனர்.தோட்டக்கலை பணிகள் குறித்து உதவி இயக்குனருடன் ஆலோசித்தனர். இதையடுத்து அன்னுார் பகுதி விவசாயிகளை தொடர்பு கொண்ட வேளாண் மாணவியர் விவசாய அடையாள அட்டை எண் பெறுவதற்கு பதிவு செய்து கொள்ளுங்கள். அனைத்து மானியத்திட்டங்களும் இந்த புதிய எண்ணை பயன்படுத்தியே அரசு வழங்கும். எனவே தங்கள் பகுதி முகாமில் பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தினர்.மேலும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்க உள்ளதாகவும் அதில் பங்கேற்று பயன்பெறும்படியும் அழைப்பு விடுத்தனர்.