உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஐ.பி.எல்., டிக்கெட் ரூ.16 லட்சம் மோசடி

ஐ.பி.எல்., டிக்கெட் ரூ.16 லட்சம் மோசடி

கோவை:கோவை, துடியலுார் திருமுருகன் நகரைச் சேர்ந்தவர் ராஜீவ்குமார், 31; ஜவுளி தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் திருப்பூரைச் சேர்ந்த ஜெபரூபன், 30. மே 5ம் தேதி ராஜீவ்குமாரை சந்தித்த ஜெபரூபன், கடந்த 18ம் தேதி நடந்த சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்தார்.தனக்கும் டிக்கெட் தருமாறு ராஜீவ்குமார் கூறினார். அதற்காக, 1.50 லட்சம் ரூபாயை ஜெபரூபனிடம் கொடுத்தார். தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக ஜெபரூபனின், வங்கிக்கணக்குகளுக்கு, 14.50 லட்சம் ரூபாய் பணத்தை அனுப்பினார். ஆனால், டிக்கெட் எதையும் பெற்றுத்தரவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டபோது, அதையும் தரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜீவ்குமார், துடியலுார் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், தலைமறைவாக உள்ள ஜெபரூபனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ