உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநில அளவிலான வாலிபால் போட்டியில் இருகூர் அரசு பள்ளி மாணவியர் அசத்தல்

மாநில அளவிலான வாலிபால் போட்டியில் இருகூர் அரசு பள்ளி மாணவியர் அசத்தல்

கோவை : ஒசூரில் நடந்த மாநில அளவிலான வாலிபால் போட்டியில் இருகூர் அரசு பள்ளி மாணவியர் அணி வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியது.ஒசூர் டிஸ்கவர் கலை அறிவியல் கல்லுாரி மற்றும் ஈகில்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 19 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கான வாலிபால் போட்டி டிஸ்கவர் கல்லுாரி மைதானத்தில் ஜூன், 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடந்தது.இப்போட்டியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 18 பள்ளி அணிகள் பங்கேற்று லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டியிட்டன. இப்போட்டியில் பங்கேற்ற இருகூர் அரசு பள்ளி மாணவியர் லீக் சுற்றில் சிறப்பாக விளையாடி அரையிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். அரையிறுதிப்போட்டியில் ஆத்துார் பாரதியார் மெட்ரிக்., பள்ளி அணியை எதிர்த்து விளையாடிய இருகூர் அரசு பள்ளி அணி 2 - 1 என்ற செட் கணக்கில் வெற்றியை தவற விட்டனர்.தொடர்ந்து நடந்த மூன்றாம் இடத்துக்கான போட்டியில் அபாரமாக விளையாடிய இருகூர் அரசு பள்ளி மாணவிர் 2 -0 என்ற நேர் செட் கணக்கில் ஒசூர் அரசு பள்ளி அணியை வீழ்த்தி மூன்றாம் இடத்தை பிடித்தனர்.வெற்றி பெற்ற மாணவியரை பள்ளி தலைமையாசிரியை ரத்தினசெல்வி, உடற்கல்வி ஆசிரியர்கள் கண்ணன், தேவ பிரியா ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை