உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் : ஜெய்ப்பூர், சண்டிகர் கலெக்சன் ஜோரு பாகல்பூர் கைத்தறி அசத்துது பாரு! ஒற்றைக்கூரையில் கொட்டிக்கிடக்குது!

தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் : ஜெய்ப்பூர், சண்டிகர் கலெக்சன் ஜோரு பாகல்பூர் கைத்தறி அசத்துது பாரு! ஒற்றைக்கூரையில் கொட்டிக்கிடக்குது!

'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சியில், பெண்களுக்காகவே ஏராளமான ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆடைகள், ஆபரணங்கள், ஹேண்ட் பேக்குகள் என தேடித் தேடி அலைந்து திரிந்து வாங்காமல், ஒரே இடத்தில் வாங்கலாம். அதுவும் பஞ்சாப், பீஹார், ராஜஸ்தான் என தேசத்தின் ஒட்டுமொத்த 'அவுட் பிட்'டையும் ஒரே இடத்தில் வாங்குவதற்காகவே 'ஏ' மற்றும் 'பி' என இரு அரங்குகளிலும் ஏராளமான ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஆடைகளைப் பொறுத்தவரை லினன், காட்டன், டஸர், பேன்சி ரக சேலைகள், சுடிதார் செட், கார்ட் செட், குர்தீ செட், ஹூடி ஜாக்கெட், ஷால் என அனைத்து வித ஆடைகளும் கிடைக்கும்.உள்ளூர் ரகங்கள் மட்டுமல்லாது, ஜெய்ப்பூரின் பிளாக் பிரின்ட் ரகங்கள் 30 சதவீதம் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பஞ்சாப், சண்டிகர் கலெக் ஷன்கள் ரூ.1,000 முதல் துவங்குகின்றன. ஜார்ஜெட், ஷிபான், ஆர்கான்ஸா, மஸ்கீன், ஸினான் என வெவ்வேறு ரகங்கள் விதவிதமான டிசைன்களில் விற்பனைக்கு உள்ளன.

கைத்தறி சும்மா தெறி!

பீஹாரின் பிரசித்தி பெற்ற பாகல்பூர் கைத்தறி ரகங்களில் சுடிதார் மெட்டீரியல்கள், சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. வெளி கடைகளில் எளிதில் கிடைக்காத இவை 'தினமலர்' கண்காட்சியில் ஸ்பெஷலாக விற்பனைக்கு வந்துள்ளன. எல்லாமே பெண்களுக்கு மட்டும்தானா என்பவர்களுக்கு கேரளத்தின் கைவல்யம் கைத்தறியில் ஆண்களுக்கும் ஆடைகள் உண்டு. ஆந்திராவின் ஸ்பெஷலான ஆடை வடிவமான 'குரோசியா' ரூ.250 முதல் பெண் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் விற்பனைக்கு உள்ளது.

மூங்கில் இழை ஆடைகள்

கண்காட்சியில் 'பி' அரங்கில், 'மைக்ரோ பேம்பு' எனப்படும் மூங்கில் இழைகளால் உருவாக்கப்பட்ட இயற்கை உள்ளாடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. உங்கள் தோலோடு தோலாக இயற்கையாக உணரும் அளவுக்கு மென்மையான இந்த உள்ளாடைகள் சுற்றுச்சூழலுக்கும் நம் சரும ஆரோக்கியத்துக்கும் உகந்தவை; சலுகை விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

நெத்திச் சுட்டி டூ பாதக்கொலுசு கொட்டிக் கிடக்குது புது தினுசு

ஆடைகளைத் தொடர்ந்து ஆபரணங்களிலும் பெண்களுக்கு எதைஎடுப்பது, எதை விடுவது என சந்தோஷமாக குழம்பும் அளவுக்கு ஏராளமான டிசைன்களில் அணி கலன்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஹை நெக் சோக்கர்ஸ், முத்து, விக்டோரியன், நாகாஸி, ஆன்டிக் டிசைன்களில் கழுத்தணிகள் என, பிரத்யேக டிசைன்களில், கட்டுபடியாகும் விலைகளில் விற்பனைக்கு உள்ளனதோடு, ஜிமிக்கி, பிரேஸ்லெட், வளையல், நெக் பேண்ட், மோதிரம் என துணி, கல் வைத்த நகைகள், தங்க, வெள்ளி நிறம் கொண்டவை, பிளாஸ்டிக், உலோகம் என வெவ்வேறு மெட்டீரியல்களால் ஆன அணிகலன்கள், இமிட்டேஷன் நகைகள் என பல நூற்றுக்கணக்கான டிசைன்களில் உங்களை அசத்தக் காத்திருக்கின்றன.முத்து வைத்த கிளிப், கேச்சிங் கிளிப், கருப்பு மணி, கொரியன் செயின், கொரியன் கிளிப் என, சிறுமியர், மகளிர் அனைவருக்குமான கூந்தல் அணிகலன்கள் விற்பனைக்கு உள்ளன. கல் வைத்தது, ஸ்டார் வடிவம், நீள வாக்கிலானது, சிறு வட்டம், மல்டி கலர் என ரூ.20 முதல் விதவிதமான பொட்டுகளை வாங்கி, ஆடைக்கேற்ப அணிந்து கொள்ளலாம்.

ஹேண்ட் பேக்குகள்

மகளிருக்கான ஹேண்ட் பேக்குகள் விதவிதமான டிசைன்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. லெதர் பேக்குகள், சுத்தமான பருத்தியால் நெய்யப்பட்டவை, சணல் பேக்குகள் என, விருப்பத்துக்கேற்ப, அனைத்து விதமான விலைகளிலும் விற்பனைக்கு கிடைக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி