உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிணத்துக்கடவு தாலுகாவில் 3 உள்வட்டத்துக்கு ஜமாபந்தி

கிணத்துக்கடவு தாலுகாவில் 3 உள்வட்டத்துக்கு ஜமாபந்தி

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில், தாட்கோ மாவட்ட மேலாளர் தலைமையில், வரும், 21ம் தேதி ஜமாபந்தி துவங்குகிறது.கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில், வரும் 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை, தாட்கோ மாவட்ட மேலாளர் தலைமையில் ஜமாபந்தி நடக்கிறது. இதில், வடசித்துார் உள்வட்டத்துக்கு உட்பட்ட பனப்பட்டி, மெட்டுவாவி, வடசித்துார், கப்பளாங்கரை, குருநல்லிபாளையம், ஆண்டிபாளையம், பெரியகளந்தை, காட்டம்பட்டி, சிறுகளந்தை ஆகிய வருவாய் கிராமங்களுக்கு வரும், 20ம் தேதி ஜமாபந்தி நடக்கிறது.கிணத்துக்கடவு உள்வட்டத்துக்கு உட்பட்ட சொக்கனுார், பொட்டையாண்டிபுறம்பு, குதிரையாலம்பாளையம், வடபுதுார், சொலவம்பாளையம், அரசம்பாளையம், கொண்டம்பட்டி, கோதவாடி, கோடங்கிபாளையம், கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையம், நல்லட்டிபாளையம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு, 21ம் தேதி நடக்கிறது.கோவில்பாளையம் உள்வட்டத்துக்கு உட்பட்ட நம்பர் 10 முத்துார், சங்கராயபுரம், சூலக்கல், கோவிந்தாபுரம், தேவராயபுரம், முள்ளுப்பாடி, மேட்டுப்பாளையம், காணியாலம்பாளையம், சோழனுார், கிருஷ்ணராயபுரம், வரதனுார், கக்கடவு, வகுத்தம்பாளையம், தேவனாம்பாளையம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு வரும், 25ம் தேதி ஜமாபந்தி நடக்கிறது.ஜமாபந்தியில், அரசு உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு உதவிகள், பட்டா மாறுதல், நில அளவை, நத்தம் பட்டா மாறுதல், வீட்டு மனை பட்டா, ரேஷன் கார்டு உள்ளிட்ட பொது பிரச்னைகள் குறித்து மனு கொடுத்து தீர்வு காணலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை