ஜெ., பிறந்தநாள் விழா; கட்சியினர் கொண்டாட்டம்
- நிருபர் குழு -அ.தி.மு.க., சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.அ.தி.மு.க., சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 77வது பிறந்த நாள் விழா பொள்ளாச்சி பகுதியில் கொண்டாடப்பட்டது.எம்.எல்.ஏ., அலுவலகம், புது பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில், அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன்மரியாதை செலுத்தினார்.நகர செயலாளர் கிருஷ்ணகுமார், கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா, ஒன்றிசெயலாளர் சக்திவேல் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர். வார்டுகள், கிராமங்களிலும் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.* உடுமலை தொகுதிக்கு உட்பட்ட சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில், ஒன்றிய செயலாளர் இளஞ்செழியன் தலைமையில், பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சி செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.* வால்பாறையில், அ.தி.மு.க., சார்பில் நடந்த விழாவில், நகர செயலாளர் மயில்கணேஷ் தலைமையில், ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கப்பட்டது. நகர துணை செயலாளர் பொன்கணேஷ் சார்பில், ஆயிரம் பேருக்கு சேலைகள் வழங்கப்பட்டன.வால்பாறை புதுமார்க்கெட் அலுவலகத்தில் நடந்த விழாவில், தொழிற்சங்க தலைவர் அமீது தலைமையில், ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.* மடத்துக்குளம் தொகுதிக்குட்பட்ட, ஜல்லிபட்டி, கணியூர் பேரூராட்சி உள்ளிட்ட இடங்களில், முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்தநாளையொட்டி, அ.தி.மு.க., சார்பில், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.மடத்துக்குளம் எம்.எல்.ஏ., மகேந்திரன் தலைமை வகித்தார். ஜெ., உருவப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட துணை செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட பிரதிநிதி அருள்ஜோதி, தெற்கு ஒன்றிய செயலாளர் போகநாதன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.ஜல்லிபட்டியில், அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் சுந்தர்ராஜன், ஊராட்சி துாய்மை பணியாளர்கள் மற்றும் பெண்கள், 577 பேருக்கு, சேலை மற்றும் இனிப்புகள் வழங்கினார். தளி பேரூராட்சி முன்னாள் தலைவர் குமரவேல், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.