உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காமாட்சியம்மன் கோவில் திருவிழா

காமாட்சியம்மன் கோவில் திருவிழா

போத்தனூர் : சுந்தராபுரம் அருகே லோகநாதபுரம், முதலியார் வீதியிலுள்ள காமாட்சியம்மன் கோவில், 42ம் ஆண்டு திருவிழா கடந்த, 7ல் கணபதி ஹோமம், கொடி கட்டுதலுடன் துவங்கியது. இரண்டு, மூன்றாம் நாட்களில் உதயம், உச்சிகால பூஜைகள் நடந்தன. நான்காம் நாள் உதயம், உச்சி கால பூஜைகளுடன் திருவிளக்கு வழிபாடு, மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தன. தொடர்ந்து, 14ம் தேதி வரை உதயம், உச்சி கால பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு அம்மன் அழைத்து வருதல், திருக்கல்யாண உற்சவம் நடந்தன. நேற்று காலை சக்தி கரக ஊர்வலம் குறிச்சி பொங்காளியம்மன் கோவிலிலிருந்து புறப்பட்டு, மதியம் கோவிலை வந்தடைந்தது. மாலை மாவிளக்கு வழிபாடும் தொடர்ந்து மகா தீபாராதனையும் நடந்தன. திரளானோர் அம்மனை தரிசித்து சென்றனர். இன்று உதய கால, உச்சி கால பூஜைகள், சக்தி கரகபுஷ்பாஞ்சலி, உறியடித்தல், மஞ்சள் நீராட்டு மற்றும் அம்மன் கரகம் வீதி உலா வருதலும் நடக்கின்றன.நிறைவு நாளான நாளை காலை உதய கால பூஜை, அம்மனுக்கு சிறப்பு மகா அபிஷேகம் நடக்கின்றன. மதியம் அன்னதானத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை