உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆனந்த சைதன்யா அறக்கட்டளை சார்பில் கற்கை நன்றே நிகழ்ச்சி

ஆனந்த சைதன்யா அறக்கட்டளை சார்பில் கற்கை நன்றே நிகழ்ச்சி

கோவை:ஆனந்த சைதன்யா அறக்கட்டளை சார்பில், நலிந்த நிலையில் உள்ள மாணவ, மாணவியருக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவை குரும்பபாளையத்தில் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை சார்பில், கோவை சத்தி ரோட்டில் உள்ள ஸ்வர்ண மஹாலில், கற்கை நன்றே உதவி தொகை வழங்கும் விழாநடந்தது. இன்ஜினியரிங், மருத்துவம், கலை பட்டப்படிப்பு படிக்கும் 60 மாணவ, மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை, சிறப்பு பரிசுகள், லேப்டாப் வழங்கப்பட்டன. சென்னை பேசில் வித் ஏ ட்விஸ்ட் ரெஸ்டரான்ட் நிறுவனர் பகீரதி, சி.ஐ.இ.டி., கல்லுாரி முன்னாள் முதல்வர் நாகராஜன், எழுத்தாளர் நரேந்திரன், பரணி குழும நிறுவன இயக்குனர் கருப்பண்ணசாமி பங்கேற்று பேசினர். ஆனந்த சைதன்யா அறக்கட்டளை நிறுவனர் தில்லை செந்தில் பிரபு பேசுகையில், மனிதர்கள் புறவாழ்வில் வளமும், அகவாழ்வில் ஆனந்தமும் கொண்டு வர உதவுவதுதான், ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நோக்கம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ