உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீடு கட்டும் முன் வரைபடத்தின் முக்கியத்துவம் தெரிஞ்சுக்கோங்க!

வீடு கட்டும் முன் வரைபடத்தின் முக்கியத்துவம் தெரிஞ்சுக்கோங்க!

வீடு கட்டும் போது, வரைபடம் எந்தளவுக்கு அவசியம் என்பது குறித்து விளக்குகிறார், கோயமுத்துார் மாவட்ட அனைத்து கட்டுமானப் பொறியாளர்கள் சங்க (காட்சியா) பொறியாளர் ஜெகதீஸ்வரன்.அவர் கூறியதாவது:உங்கள் கனவு இல்லம் அமையும் இடத்தில் மண் பரிசோதனை செய்து, அதன் பின் திட்ட வரைபடத்தில் உள்ளவாறு தரைதளம், முதல் தளம் அல்லது கூடுதல் தளங்கள் அமைக்கலாம்.அதற்கு ஏற்றவாறு புட்டிங் அமைப்பதற்கான நீளம், அகலம், உயரம், காலம் போஸ்டின் நீளம் அகலம் அதற்கான கம்பிகள், பீம், சன்சேடு, லாப்ட் மற்றும் ரூப் சிலாப் இவற்றிற்கான உயரம் மற்றும் கனம், இவற்றிற்கான கம்பிகள் கட்டுவதற்கான வரைபடங்கள் மற்றும்கம்பியின் அளவு, கிரேடு, கான்கிரீட்டின் கிரேடு ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும்.இதனால் உங்கள் கட்டடத்திற்கு தேவையான உறுதியும் ஆயுளும் கூடும். கம்பி மற்றும் சிமென்ட் விரயமாவதை தவிர்க்கலாம். எனவே, ஸ்ட்ரச்சுரல் வரைபடம் இன்றியமையாதது. இதை தயார் செய்து அதன்படி பணியை தொடரவும்.

எலக்ட்ரிக்கல் டிராயிங்

ஒவ்வொரு அறைக்கும் அதன் பயன்பாடு, அறையின் நீளம் மற்றும் அகலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு அறைக்கும் தேவையான மின்விசிறி, மின்விளக்கு, ஏ.சி, டி.வி., மற்றும் தேவையான பிளக் பாயின்ட்கள், சீலிங்கில் என்னென்ன பாயின்டுகள் எவ்வளவு இடைவெளியில் அமைப்பது மற்றும் சுவரில் அமையும் பாயின்டுகள் எவ்வளவு, அவற்றை எந்த இடத்தில் எவ்வளவு உயரத்தில் அமைப்பது ஆகியவை, இதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் டிராயிங்

வீட்டின் உட்பகுதியில் ஹாலில் டிவி ஷோகேஸ், சோபா மற்றும் பால்சீலிங், பெட்ரூமில் கப்போர்டு, வார்டுரோப், மாடுலர் கிச்சன் ஆகியவற்றை அமைக்கவும், கட்டடத்தின் வெளிப்புறம் எலிவேஷன் அமைக்கவும், இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் டிராயிங் அவசியம்.இவ்வாறு, அவர் கூறினார்.

பிளம்பிங் டிராயிங் முக்கியம்

பல வீடுகளில் முறையான பிளம்பிங் வரைபடம் இல்லாமல், பிளம்பிங்கில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் சரிசெய்யவும். நீர்கசிவினால் வீட்டின் தோற்றமும் ஸ்திரத்தன்மையும் பாதிக்கும்.ஆகையால், தரையில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்தும், போர்வெல்லிலிருந்தும் மாடியில் உள்ள தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வது, முதல் மாடி தொட்டிகளில் இருந்து நல்ல தண்ணீர் மற்றும் உப்பு தண்ணீர் எந்தெந்த இடங்களுக்கு வேண்டும் என்பதையும், கழிவு நீர் வெளியேற மற்றும் மழை நீர் பைப்புகள் அமைக்கவும், மேன்ஹோல் சேம்பர்கள் அமைக்கவும், பி.வி.சி., யு.பி.வி.சி., பைப்புகள் எங்கு பயன்படுத்த வேண்டும், அதன் அளவு, சிபிவிசி பைப்புகள் எங்கு பயன்படுத்த வேண்டும் அதன் அளவு மற்றும் கிரேடு அத்தனையும் முக்கியம். பிளம்பிங்கில் ஏதேனும் பிரச்னை என்றால், கழிவு நீர் கசிவு, அடைப்பு ஆகியவற்றால் வீடே நாறி விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை