மேலும் செய்திகள்
விஸ்வ ஹிந்து பரிஷத் ஸ்தாபன தின விழா
28-Aug-2024
சூலூர்;விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், நடுப்பாளையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், ஸ்தாபன தினம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா நடுப்பாளையத்தில் கொண்டாடப்பட்டது. கிருஷ்ணர், ராதை வேடமணிந்த குழந்தைகளின் ஊர்வலத்தை, ஓய்வு பெற்ற ஆசிரியர் கிருஷ்ணசாமி துவக்கி வைத்தார். சுவாமி விவகானந்தர் இளைஞர் சக்தி இயக்க தலைவர் சம்பத்குமார், விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் தியாகராஜன், ராம முத்து, சுந்தரமூர்த்தி, அசோக் உள்ளிட்டோர் பேசினர். சுவாமினி ஆதிசங்கரி காயத்திரி தேவி ஆசியுரை வழங்கினார்.கிருஷ்ண ஜெயந்தி ஏன் கொண்டாட வேண்டும், குலதெய்வ வழிபாடு குறித்து விளக்கப்பட்டது. அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
28-Aug-2024