உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை புறநகரில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்

கோவை புறநகரில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்

-நிருபர் குழு-கோவை புறநகரில் கிருஷ்ண ஜெயந்தி விழா, பொதுமக்கள் சார்பில் கொண்டாடப்பட்டது.மேட்டுப்பாளையம் மேதக்காரர் வீதியில், கிருஷ்ணர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மாலை, 5:45 மணிக்கு பொதுமக்கள் சார்பில் கிருஷ்ணர் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது.கோவிலில் இருந்து சுவாமி ஊர்வலம் துவங்கியது. இந்த ஊர்வலத்தின் முன்பாக சிறுவர், சிறுமியர், கிருஷ்ணர், ராதை வேடமிட்டு வந்தனர். முன்னதாக ஊர்வலத்தில் பஜனை குழுவினர் கோலாட்டம், கும்மியாட்டம் அடித்தும், ஆடியும் வந்தனர்.கோவிலில் இருந்து துவங்கிய இந்த ஊர்வலம் பழைய கிராம நிர்வாக அலுவலகம் வீதி, பெரிய பள்ளிவாசல் வீதி, செந்தில் தியேட்டர் வீதி, ஊட்டி சாலை, மேதர் பிள்ளையார் கோவில் வீதி வழியாக மீண்டும் கோவிலை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

அன்னுார்

அன்னுார் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் 78ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று நடந்தது. மாலையில் கோவை நாட்டிய அகாடமியின் பரதநாட்டியம் நடந்தது. சிறுமியர் மற்றும் மகளிர் பக்தி பாடலுக்கு நடனமாடி பக்தர்களை கவர்ந்தனர். இதையடுத்து 40-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர், கிருஷ்ணர் போல் வேடம் அணிந்து வந்து கோவிலை வலம் வந்து வழிபாடு செய்தனர்.இதைத் தொடர்ந்து குழந்தை கிருஷ்ணரை ஊஞ்சலில் தாலாட்டும் வைபவம் நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் நடராஜன் மற்றும் தாச பளஞ்சிக சேவா சங்க நிர்வாகிகள் உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இன்று காலை அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு பஜனை மற்றும் உறியடித்தலும் இரவு 10:00 மணிக்கு வழுக்கு மரம் ஏறும் வைபவமும் நடக்கிறது.

சூலூர் -

விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், நடுப்பாளையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், ஸ்தாபன தினம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா நடுப்பாளையத்தில் கொண்டாடப்பட்டது.கிருஷ்ணர், ராதை வேடமணிந்த குழந்தைகளின் ஊர்வலத்தை, ஓய்வு பெற்ற ஆசிரியர் கிருஷ்ணசாமி துவக்கி வைத்தார்.சுவாமி விவகானந்தர் இளைஞர் சக்தி இயக்க தலைவர் சம்பத்குமார், விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் தியாகராஜன், ராம முத்து, சுந்தரமூர்த்தி, அசோக் உள்ளிட்டோர் பேசினர். சுவாமினி ஆதிசங்கரி காயத்திரி தேவி ஆசியுரை வழங்கினார்.கிருஷ்ண ஜெயந்தி ஏன் கொண்டாட வேண்டும், குலதெய்வ வழிபாடு குறித்து விளக்கப்பட்டது. அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை