உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கே.டி.எம்., கோப்பை பைக் ரேஸ் மூன்று சுற்றுகளில் பறந்த வீரர்கள்

கே.டி.எம்., கோப்பை பைக் ரேஸ் மூன்று சுற்றுகளில் பறந்த வீரர்கள்

கோவை;கே.டி.எம்., கப் தேசிய அளவிலான பைக் ரேஸின் இறுதிப்போட்டி, கோவை கரி மோட்டார் ஸ்பீடு வே தளத்தில் நேற்று நடந்தது. கே.டி.எம்., நிறுவனம் சார்பில், இரண்டாம் ஆண்டு கே.டி.எம்., கோப்பைக்கான தேசிய அளவிலான பைக் ரேஸ், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டது. இதன் முதற்கட்டமாக, தேர்வு போட்டிகள் கோவை, மும்பை, டில்லி, கோல்கட்டா ஆகிய நான்கு நகரங்களில் நடத்தப்பட்டன.இதில், 114 நகரங்களை சேர்ந்த 860 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அதன் இறுதிப்போட்டி கோவையில் நேற்று நடந்தது. அமெச்சூர், புரோ மற்றும் பெண்கள் என மூன்று பிரிவுகளில், மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில், பங்கேற்ற வீரர்கள் சீறிப்பாய்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி