உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பில்டர்ஸ் அசோசியேஷன் தலைவருக்கு பாராட்டு 

பில்டர்ஸ் அசோசியேஷன் தலைவருக்கு பாராட்டு 

கோவை : 'பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியாவின்' தலைவராக தேர்வு பெற்றுள்ள, இன்ஜினியர் விஸ்வநாதனுக்கு, கோவையில் பாராட்டு விழா நடந்தது.கோவையில் இன்ஜினியர்களுக்கான பல்வேறு அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்த விஸ்வநாதன், இந்திய தேசிய கட்டுமானத்துறை அமைப்பான பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியாவின் தலைவராக, ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இதற்கு, கோவை மாவட்ட திராட்சை உற்பத்தியாளர் சங்கம் மற்றும் தொண்டாமுத்துார் ரோட்டரி கிளப் இணைந்து, பாராட்டு விழா நடத்தின. சிறுவாணி ரோட்டிலுள்ள லோட்டஸ் மஹாலில் நடந்த விழாவில், கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதா லட்சுமி, கல்வியாளர் கிருஷ்ணராஜ் வாணவராயர் பங்கேற்று கவுரவித்தனர்.முன்னாள் எம்.எல்.ஏ., கந்தசாமி மற்றும் திராட்சை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் விஜயன் பழனிசாமி, செயலாளர் விவேகானந்தன், தொழில்நுட்ப ஆலோசகர் மாணிக்கம், சங்கத்தின் முன்னாள் தலைவர் வேலு மயில்சாமி ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ