உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பட்டத்தரசி அம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

பட்டத்தரசி அம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் உள்ள, குத்தாரிபாளையத்தில் மிகவும் பழமை வாய்ந்த பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மதுரை வீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள், முனியப்பன் ஆகிய சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்து வர்ணம் தீட்டப்பட்டது. நேற்று மாலை புனித நீர் வழிபாடும், மூத்த பிள்ளையார் வழிபாடும் நடைபெற்றது. பவானி ஆற்றில் இருந்து புனித நீரும், முளைப்பாரியும் கோவிலுக்கு எடுத்து வந்தனர். கோபுரத்தில் விமான கலசம் மற்றும் எண் வகை மருந்து சாத்தப்பட்டது. இன்று காலை இரண்டாம் கால வேள்வி பூஜையை அடுத்து, 9:00 மணிக்கு மேல், 10:00 மணிக்குள், கோபுர கலசத்திற்கும், மூலவர் சுவாமிக்கும், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ