உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லட்சுமிபுரீஸ்வரி திருக்கல்யாணம்

லட்சுமிபுரீஸ்வரி திருக்கல்யாணம்

கோவை: கோவை, இடையர்பாளையம், லட்சுமி நகர், லட்சுமி விநாயகர் கோவிலில், லட்சுமிபுரீஸ்வரர்-லட்சுமிபுரீஸ்வரி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.முன்னதாக, கடந்த புதன்கிழமை முகூர்த்தக்கால் நட்டு விழா துவங்கியது. தொடர்ந்து முளைப்பாரி எடுத்தல், இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தன. கோ பூஜை, அம்மன் அழைப்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, திருக்கல்யாணம் நடைபெற்றது.லட்சுமிபுரீஸ்வரி அம்மன் திருக்கல்யாண அலங்காரத்தில் அருள்பாலித்தார். திருமணத்துக்காக காத்திருப்போர் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றனர். மதியம் அன்னதானம், மாலை திருவிளக்கு வழிபாடு நடந்தது.வரும் புதன்கிழமை, லட்சுமிபுரீஸ்வரர் சமேத லட்சுமிபுரீஸ்வரிக்கு வளைகாப்பு மற்றும் வளையல் அலங்காரம் நடைபெறவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ