உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு துவக்கம்

ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு துவக்கம்

கோவை;மூன்று நாட்கள் நடக்கும் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு முகாம் நேற்று துவங்கியது.கேரளாவில் இருந்து தமிழகம் வழியாக கர்நாடகா மாநிலத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் யானைகள் வலசை செல்கின்றன. அந்தந்த மாநிலங்கள் சார்பில் நடத்தப்படும் யானைகள் கணக்கெடுப்பால், யானைகளின் உண்மையான எண்ணிக்கை தெரிவதில்லை. இதைக்கருத்தில் கொண்டு, தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்கள் இணைந்து ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். தற்போது, வனத்துறை சார்பில் இந்தாண்டு கணக்கெடுப்பு மூன்று நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று வனத்துறை சார்பில் யானைகள் கணக்கெடுப்பு துவங்கியது. கடந்த, 2023ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி தமிழகத்தில், 2,961 யானைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.மாவட்ட வனஅலுவலர் ஜெயராஜ் கூறுகையில்,''கோவை வனக்கோட்டத்தில் உள்ள ஏழு வனச்சரகத்தில், 42 பிளாக்குகள் உள்ளன. ''இதில், 84 ஊழியர்கள், 40 அலுவலர்கள், வனக்கல்லுாரி பயிற்சி மாணவர்கள், டபிள்யூ டபிள்யூ.எப்., அமைப்பு ஆகியோர் இணைந்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. மூன்று நாட்கள் நடக்கும் ஆய்வு முடிவின் அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ