உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தையூரில் ராக்கெட் தயாரிப்பு பயிற்சி மையம் திறந்துவைப்பு

தையூரில் ராக்கெட் தயாரிப்பு பயிற்சி மையம் திறந்துவைப்பு

திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த தையூர் ஊராட்சியில் அடங்கிய கோமான் நகர் பகுதியில், ஸ்பேஸ் ஜோன் இந்தியா அமைப்பு சார்பில், ராக்கெட் தயாரிப்பு மற்றும் பயிற்சி மையம் நிறுவப்பட்டுள்ளது.இதற்கான திறப்பு விழா, நேற்று நடந்தது. இதில், ஸ்பேஸ் ஜோன் இந்தியா அமைப்பின் நிறுவனர் ஆனந்த் மேகலிங்கம் தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக, இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று, மையத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:விண்வெளி யுகம் வேகமெடுத்துள்ளது. நிலவில் தண்ணீர் கண்டு பிடித்தோம், செவ்வாய்க்கு சென்றோம். அந்த வகையில், பூமியை தாண்டி இன்னொரு கிரகத்திற்கு சென்று, அங்கு மனிதர்கள் வாழ முடியுமா என ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன.இந்த ஆராய்ச்சிகளுக்கு, விண்கல ஏவுதல்கள்,புதுப்புது கண்டுபிடிப்புகள் தேவை. இதில், அரசின் விண்வெளித் துறையை தாண்டி, தனியார் துறையும்பங்களிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.இந்த அமைப்பின் சார்பில், கடந்த ஆண்டு மாமல்லபுரம் அருகே ராக்கெட் ஏவப்பட்டது. தொடர்ந்து, வரும் ஆக., 24ம் தேதி, அடுத்த ராக்கெட் அனுப்பப்பட உள்ளது. கல்வி நிறுவனங்கள்ஒரு பொறியாளரைஉருவாக்கும்போது, பாடப்புத்தகத்தை தாண்டி, இதுபோன்ற மையத்தில்செய்முறை பயிற்சி எடுப்பது சிறப்பாக இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி