உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நுாலகங்களை மேலும் நவீனப்படுத்த வேண்டும்

நுாலகங்களை மேலும் நவீனப்படுத்த வேண்டும்

கோவை;கோவை மாவட்ட மைய நுாலகத்தில், நுாலகர் தினவிழா கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு, மாவட்ட நுாலக அலுவலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற வக்கீல் மதி வாணன் பேசியதாவது:டிஜிட்டல் நுாலகம் வளர்ந்து வரும் காலத்தில், நுாலகங்களுக்கு வாசகர்களை வர வைப்பதும், நுால்களை படிக்க வைப்பதும் சவாலான பணியாகும்.ஆனாலும், அரசு நுாலகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. பல புதிய நுால்கள் நுாலகங்களில் வைக்கப்பட்டுள்ளன. அதனால் நுாலகங்களுக்கு வாசகர்கள் வருகின்றனர்.நுாலகங்களை மேலும் நவீனப்படுத்த வேண்டும். வாசகர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.வரலாற்று ஆய்வாளர் இளங்கோவன், கண்காணிப்பாளர் ஜெயகாந்தி, நுாலக ஆய்வாளர் கணேசன், முதல் நிலை நுாலகர் சாந்தி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.விழாவில், போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. நூலகர் தின விழாவில் நடந்த போட்டிகளில், வெற்றி பெற்ற நுாலக பணியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை