உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மது போதையில் தொழிலாளியை அடித்து  கொன்றவருக்கு ஆயுள்சிறை

மது போதையில் தொழிலாளியை அடித்து  கொன்றவருக்கு ஆயுள்சிறை

கோவை;மது போதையில் ஏற்பட்ட தகராறில், தொழிலாளியை அடித்து கொன்றவருக்கு ஆயுள்சிறை விதிக்கப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள கோட்டூரை சேர்ந்த மகாலிங்கம்,32, என்பவர் ஆனைமலை, திவான்சாபுதுாரிலுள்ள தென்னை நார் மில்லில் வேலை செய்து வந்தார். அதே மில்லில், உடுமலை அருகேயுள்ள தொப்பம்பட்டியை சேர்ந்த செல்வராஜ்,45, என்பவரும் வேலை செய்தார். கடந்த 2022, பிப்., 5 ல், இருவரும் சேர்ந்து மது குடித்த போது, அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த செல்வராஜ், தென்னை மட்டையால் மகாலிங்கம் தலையில் அடித்து கொலை செய்தார்.புகாரின் பேரில், ஆனைமலை போலீசார் விசாரித்து, செல்வராஜை கைது செய்தனர். இவர் மீது, கோவை மூன்றாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி பத்மா, குற்றம் சாட்டப்பட்ட செல்வராஜிக்கு, ஆயுள்சிறை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.அரசு தரப்பில் வக்கீல் கணேசன் ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை