உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பகவான் கிருஷ்ணர் நம்முடன் இருப்பார்

பகவான் கிருஷ்ணர் நம்முடன் இருப்பார்

அன்னுார்;'இஸ்கான்' இயக்கம் சார்பில், அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில், நேற்று முன்தினம் மாலை, 'கீதை காட்டும் பாதை' என்னும் தலைப்பில் சொற்பொழிவு நடந்தது.'ஹரே கிருஷ்ணா' இயக்கத்தின் மாவட்ட நிர்வாகி மது கோபால் தாஸ் பிரபு, பேசுகையில், கிருஷ்ணர் நாமத்தை எப்போதும் உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். எதிர்பார்ப்புகள் சில நேரங்களில் ஏமாற்றங்களை தரும். கடமையை செய்து, பலனை எதிர்பாராமல் இருப்பதே, அனேக அற்புதங்களுக்கு வழிவகுக்கும். நம்முடன் எப்போதும் கிருஷ்ணர் இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இல்லாதவற்றை நினைத்து கவலை கொள்வதை விடுத்து, கிடைத்தவற்றை வைத்து பெருமை கொண்டால், வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எதை நாம் படைத்திருந்தாலும், அது இங்கிருந்தே எடுத்து படைக்கப்பட்டது என்பதை நினைவு கொள்ள வேண்டும்,'' என்றார்.பகவத் கீதை கீர்த்தனைகள் பாடப்பட்டன. ஒருங்கிணைப்பாளர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ