ஆனைமலை;ஆனைமலை, கொங்கலப்பம்பாளையத்தில் உள்ள, மதுரைவீரன் சுவாமி கோவில் கும்பாபிேஷகம் விமர்சையாக நடந்தது. நேற்றுமுன்தினம், மாலை, 6:00 மணிக்கு, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து பூஜை முதலான பூர்வாங்க பூகைள் மற்றும் முதற்கால பூஜை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, விமானகலசம் வைத்தல், யந்த்ர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று, கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, காலை, 6:00 மணிக்கு, இரண்டாம்கால யாக பூஜை, மண்டபாராதனை, திரவ்யாஹுதி, மகாபூர்ணாஹுதி, கலசம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து, கோபுர உச்சியில் இருந்த கலசத்திற்கு மந்திரங்கள் முழங்க, சுப்ரமணியம் சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள், புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தினர். பக்தர்கள் திரளாக பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, அன்னதானம் நடந்தது.