மாகாளியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
வால்பாறை, ;வால்பாறை, சிறுகுன்றா எஸ்டேட் மாகாளியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.வால்பாறை அடுத்துள்ள சிறுகுன்றா எஸ்டேட் மாகாளியம்மன் கோவிலின், 71ம் ஆண்டு திருவிழா, கடந்த, 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது.வரும், 7ம் தேதி நள்ளிரவு, 12:00 மணிக்கு சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றிலிருந்து அம்மன் சக்தி அழைத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 8ம் தேதி காலை, 8:00 மணிக்கு விநாயகர், காளியம்மன், முருகன் ஆகியோருக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடக்கிறது. அதனை தொடர்ந்து, மதியம், 12:00 மணிக்கு பொங்கல், மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக செல்கின்றனர்.அதன் பின், கோவில் வளாகத்தில் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு மகளிர் சார்பில் திருவிளக்கு மற்றும் மாங்கல்ய பூஜை நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.வரும், 9ம் தேதி காலை, 10:00 மணிக்கு பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு பூட்டியும் கோவிலுக்கு ஊர்வலமாக செல்கின்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை சிறுகுன்றா எல்.டி., மற்றும் யு.டி., பகுதி தொழிலாளர்கள் செய்து வருகின்றனர்.