உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உச்சிமாகாளியம்மன் கோவிலில் மஹா கும்பாபிேஷக விழா

உச்சிமாகாளியம்மன் கோவிலில் மஹா கும்பாபிேஷக விழா

ஆனைமலை:ஆனைமலை அருகே அர்த்தநாரிபாளையம் உச்சி மாகாளியம்மன் கோவிலில், ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிேஷக பெருஞ்சாந்தி பெருவிழா கடந்த, 13ம் தேதி அனுக்ஞையுடன் துவங்கியது.கடந்த, 14ம் தேதி விநாயகர் பூஜை, புண்யாஹம், மஹா கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், பூர்ணாஹூதி உள்ளிட்ட பூஜைகளும், மாலையில், முதல்கால யாக பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.நேற்றுமுன்தினம் வேதபாராயணம், இரண்டாம் கால யாக பூஜை, கோபுர கலசம் வைத்தல், விநாயகர் பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து விநாயகர் பூஜை, லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, விநாயகர், உச்சி மாகாளியம்மன் சிலைகள் பிரதிஷ்டை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.நேற்று காலை, நாடி சந்தானம், யாக பூஜை, மஹா பூர்ணாஹூதி, கோ பூஜை, தச தரிசனம் உள்ளிட்ட பூஜைகளும், காலை, 9:00 மணிக்கு கலசம் புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது.காலை, 9:30 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் விமான கும்பாபிேஷகம், மூலவர், விநாயகர், உச்சி மாகாளியம்மனுக்கு கும்பாபிேஷகம் நடைபெற்றது.ராமானுஜ பெருந்தொண்டர் முன்னாள் எம்.எல்.ஏ., சண்முகசுந்தரம், ஆனைமலை ஆர்ஷ வித்யா பீடம் பூஜ்யஸ்ரீ ததேவானந்தா சரஸ்வதி சுவாமிகள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கும்பாபிேஷக விழாவையொட்டி, வள்ளி கும்மியாட்டம், இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை