உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மகாலிங்கம் இன்ஜினியரிங் கல்லுாரி ஆண்டு விழா

மகாலிங்கம் இன்ஜினியரிங் கல்லுாரி ஆண்டு விழா

கோவை;டாக்டர் மகாலிங்கம் இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியின், 26வது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. மாணவர் சேவை மன்ற தலைவர் சூர்யகுமார் வரவேற்றார். முதல்வர் கோவிந்தசாமி ஆண்டு அறிக்கை வாசித்தார். சென்னை நியூ மார்க்கெட் டெவலெப்மென்ட் அண்ட் குளோபல் ஹெட் நிர்வாக துணைத் தலைவர் சிவராமகிருஷ்ணன் செந்தட்டி பேசுகையில், ''தொழில்நுட்பம் பற்றிய அறிவை பெறுவதற்கு சமூக ஊடக தளங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும். உங்கள் வலிமையை அறிந்துகொண்டு, அதை பலப்படுத்த, முயற்சி செய்யுங்கள். அனைவரும் தொழில்நுட்பக் கருவிகளை புரிந்துகொள்ள வேண்டும். ஏ.ஐ., நம்மை ஆளும். அதன் கண்டுபிடிப்புகள் மூலம் உலகம் முழுவதையும் மாற்றும்,'' என்றார். கல்லுாரியின் முன்னாள் மாணவியும் பெங்களூரு, பிடிலிடி இந்தியா இயக்குனருமான (கட்டடக்கலை பகுப்பாய்வு) சுமதி, கவுரவ விருந்தினராக பங்கேற்றார். ஆண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில், என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் செயலாளர் ராமசாமி, என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் முதன்மை மனித வள அதிகாரி, சுப்ரமணியன்,- கல்வி மற்றும் தன்னாட்சி டீன் செந்தில் குமார்,- ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு டீன் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ