உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இயந்திரத்தில் கோளாறு; ஓட்டுப்பதிவு நேரம் நீட்டிப்பு

இயந்திரத்தில் கோளாறு; ஓட்டுப்பதிவு நேரம் நீட்டிப்பு

சூலூர்;சூலூர் அடுத்த ராசிபாளையம் பூத்தில், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால், ஓட்டுப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டது.சூலூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்டது ராசி பாளையம். இங்குள்ள உயர்நிலைப்பள்ளியில், பூத் எண், 74 உள்ளது. நேற்று ஓட்டுப்பதிவு துவங்கும் போது, மின்னணு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, மாற்று இயந்திரம் பொருத்தப்பட்டது. அதனால், அரைமணி நேரம் தாமதமாக, ஓட்டுப்பதிவு துவங்கியது. இந்நிலையில், சக்கர நாற்காலியில் வந்து ஓட்டளிக்கும் போது, கன்ட்ரோல் யூனிட் மற்றும் பேலட் யூனிட் இணைப்பு கேபிள்கள், சேதமடைந்ததாக கூறப்படுகிறது.இதனால், பேலட் யூனிட்கள் இடம் மாற்றி வைக்கப்பட்டன. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஓட்டுப்பதிவு பாதிக்கப்பட்டது. பேலட் யூனிட் இடம் மாற்றி வைக்கப்பட்டதால், வாக்காளர்கள் குழப்பமடைவதாக, கட்சியினர் புகார் தெரிவித்தனர்.எம்.எல்.ஏ., கந்தசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி ஆகியோர் ஓட்டுப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினர். தாசில்தார் தனசேகர், டி.எஸ்.பி., தங்க ராமன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, ஓட்டுப்பதிவு இரண்டு மணி நேரம் நீட்டிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ