உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண்ணை கட்டையால் தாக்கிய நபர் கைது

பெண்ணை கட்டையால் தாக்கிய நபர் கைது

மேட்டுப்பாளையம்:காரமடை கண்டியூர் பகுதியை சேர்ந்தவர் ராதாமணி, 52. இவரது கணவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன் இறந்துவிட்டார். இவருக்கு இரண்டு மகன்கள். கணவரின் 5 ஏக்கர் விளைநிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவரது கணவரின் அக்கா மகன், இவருக்கு தெரியாமல், 5 ஏக்கர் விளைநிலத்தில் 1.5 ஏக்கர் நிலத்தை கண்டியூரை சேர்ந்த சாவித்திரி, 35, என்பவருக்கு விற்றுள்ளார். இதனால் சாவித்திரி மற்றும் அவரது கணவர் சுப்பிரமணி, 42, நிலத்தை பிரித்து கொடுக்குமாறு, ராதாமணியிடம் அடிக்கடி கேட்டு வந்தனர். இந்நிலையில், ராதாமணி தனது மூத்த மகன் சந்தோஷ்குமாருடன், நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்த போது, சாவித்திரி மற்றும் அவரது கணவர் சுப்பிரமணி ஆகியோர் அங்கு வந்து ராதாமணியை கட்டையால் தாக்கினர். இதில் ராதாமணிக்கு காயம் ஏற்பட்டது. அவர் வலியால் அலரி சத்தம் போட, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து ராதாமணியை மீட்டனர்.இதுகுறித்து ராதாமணி, காரமடை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் சுப்பிரமணியை கைது செய்தனர். ----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்