உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீடு புகுந்து நகை திருடிய நபருக்கு வலை

வீடு புகுந்து நகை திருடிய நபருக்கு வலை

சூலுார்; ஓடக்கல்பாளையத்தில் வீடு புகுந்து நகை திருடிய நபரை, போலீசார் தேடி வருகின்றனர்சுல்தான்பேட்டை ஒன்றியம் ஓடக்கல்பாளையத்தை சேர்ந்தவர் கருப்புசாமி, 46. கைத்தறி நெசவாளி. இவர் தனது மனைவியுடன் நேற்று முன்தினம் செஞ்சேரிப்புத்துாரில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றார். மாலை திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, எட்டு சவரன் நகை திருட்டு போயிருப்பது தெரிந்தது. இதுகுறித்து அவர் சுல்தான்பேட்டை போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், நகை திருடிய நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை