மேலும் செய்திகள்
இருசக்கர வாகனங்கள் ஏலம்
27-Aug-2024
கோவை : நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில், இரு சக்கர வாகனங்கள் தீயில் கருகின. கோவை ராம்நகர், விவேகானந்தா ரோட்டில் எஸ்.எஸ்.ஆட்டோ ஒர்க்ஸ், ஜசோல் ரெக்சின் ஹவுஸ் என இரண்டு கடைகள் அடுத்தடுத்து உள்ளன. இதில், ஜசோல் ரெக்சின் கடையில், கார் சீட் கவர் தயாரிக்க பயன்படுத்தப்படும் ரெக்சின், செயற்கை லெதர் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் இங்கு தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஷெட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் கருகின. ரெக்சின் கடையில் இருந்த பஞ்சு, ரெக்சின் ஷீட்கள் உள்ளிட்டவை பற்றிக்கொண்டதால், தீ கொழுந்து விட்டு எரிந்தது. அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில் வந்த, தீயணைப்புத்துறை கோவை மாவட்ட அதிகாரி புளுகாண்டி தலைமையில், தெற்கு மற்றும் கவுண்டம்பாளையம் தீயணைப்புத்துறையினர், சுமார் ஆறு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த விபத்தில், மெக்கானிக் ஷெட்டில் இருந்த பைக், உதிரிபாகங்கள், ரெக்சின் ஹவுஸ் கடையில் இருந்த பொருட்கள் என, சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கருகின. காட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
27-Aug-2024