உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பணம், நகை திருட்டு; மர்மநபர்களுக்கு வலை

பணம், நகை திருட்டு; மர்மநபர்களுக்கு வலை

நெகமம்; நெகமம், ரங்கம்புதூரில் உள்ள குடியிருப்பு பகுதியில் நகை திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.நெகமம், ரங்கம்புதூரை சேர்ந்தவர் அம்மாசை, 44, தனியார் கம்பெனி தொழிலாளி. இவர், நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். வேலை முடித்து வீடு வந்து பார்க்கும் போது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.மேலும், பீரோவில் இருந்த ஆறு சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்ததை உறுதி செய்தார். இதை தொடர்ந்து, நெகமம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணம் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை