பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், அரசியல் கட்சிகள் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட காங்., கட்சி சார்பில், சுதந்திர தின விழா கட்சி அலுவலகத்தில் நடந்தது. காந்தி, காமராஜர், இந்திரா படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, தேசியக்கொடியேற்றப்பட்டது.கோவை ரோடு, பஸ் ஸ்டாண்டில் உள்ள காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மாவட்ட தலைவர் பகவதி, நகர காங்., தலைவர் செந்தில்குமார், வட்டார தலைவர்கள் தமிழ்செல்வன், மகாலிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில், கோவை தெற்கு மாவட்டம் மற்றும் நகர பா.ஜ., சார்பில், தேசியக்கொடி ஏந்தி சுதந்திர தின வாகன பேரணி நடந்தது. நகர பா.ஜ., தலைவர் பரமகுரு தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் துரை உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.மகாலிங்கபுரம் ரவுண்டானா ஆர்ச் வழியாக துவங்கிய பேரணி, கோவை ரோடு, சப் - கலெக்டர் அலுவலக ரோடு, தபால் அலுவலக ரோடு, தேர்நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் மகாலிங்கபுரம் ஆர்ச் பகுதியில் நிறைவடைந்தது. வால்பாறை
ஹிந்து முன்னணி வால்பாறை தாலுகா சார்பில், கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் சேகர் தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் ஹிந்து முன்னணியினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ஹிந்து முன்னணி நகர தலைவர் சதீஸ், பொதுச்செயலாளர் லோகேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உடுமலை
உடுமலை பா.ஜ., சார்பில், சுதந்திர தின விழா நடந்தது. தேசியக்கொடி ஏற்றப்பட்டு, குட்டை திடலில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, தேசியக்கொடி ஏந்தி வாகன பேரணி நடந்தது.நகரத்தலைவர் கண்ணாயிரம் தலைமை வகித்தார். நிர்வாகிகள்,ஜோதீஸ்வரி, ராதிகா, சீனிவாசன், பிரவீன், சின்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.- நிருபர் குழு -