உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் பல்கலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் 

வேளாண் பல்கலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் 

கோவை : தமிழ்நாடு வேளாண் பல்கலையின் உயிரி தொழில்நுட்ப மையம் சார்பில், ஸ்டாட் அப் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. வேளாண் பல்கலையில், 1.06 லட்சம் சதுரஅடி பரப்பில் உயிரி தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக பல்கலைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், ஸ்டாட் அப் நிறுவனங்களுக்கு இடையே புதுமையான கண்டுபிடிப்புகள், அறிவுசார் தொழில்நுட்பங்களை பரிமாற்றம் செய்ய வழிவகுக்கும். அதன்படி, ஸ்டாட் அப் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு பல்கலை அரங்கில் நடந்தது. இதில், ஒன்னோமிக்ஸ் பிரைவேட் லிமிடெட், புஸ்மர் அக்ரோ புட்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மகாசக்தி நேச்சுரல் யுனிவர்ஸ் புட் புராடக்ஸ் ஆகிய நிறுவனங்கள் வேளாண் பல்கலையுடன் இணைந்து செயல்படவுள்ளன. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், துணைவேந்தர் கீதாலட்சுமிந பதிவாளர் தமிழ்வேந்தன், உயிரி தொழில்நுட்ப மைய இயக்குனர் செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ