உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவைக்கு வந்த எம்.எஸ்.எம்.இ., ஸ்டார்ட் அப் யாத்திரை

கோவைக்கு வந்த எம்.எஸ்.எம்.இ., ஸ்டார்ட் அப் யாத்திரை

கோவை;இந்திய பட்டயக் கணக்காளர் சங்கம் சார்பில் , 'எம்.எஸ்.எம்.இ., மற்றும் ஸ்டார்ட் அப் யாத்திரை' வாகனம், நேற்று கோவை வந்தது.இந்திய பட்டயக் கணக்காளர் சங்கம் (ஐ.சி.ஏ.ஐ.,) சார்பில், குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் துறைசார் நிபுணர்களின் வழிகாட்டல், ஆதரவு, நிறுவனங்களைப் பதிவு செய்தல், நிதி, ஆலோசனை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு ஒரே தளத்தில் தீர்வு கிடைக்கும் வகையில், ஸ்டார்ட் அப் ரத யாத்திரை துவக்கப்பட்டுள்ளது.75 நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள, 75 நகரங்களை இந்த யாத்திரை சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. கோவை, ஐ.சி.ஏ.ஐ., வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்வில், ஸ்டார்ட் அப் யாத்திரை வாகனத்தை, கலெக்டர் கிராந்திகுமார், கொடியசைத்து துவக்கி வைத்தார்.ஐ.சி.ஏ.ஐ., கோவை கிளை தலைவர் விஷ்ணு ஆதித்தன் பேசுகையில், “ஐ.சி.ஏ.ஐ.,யின் இந்த முயற்சியானது தொழில்முனைவு மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் நமது முயற்சி மற்றும் ஆர்வத்துக்கான எடுத்துக்காட்டாகும்.எம்.எஸ்.எம்.இ., மற்றும் ஸ்டார்ட் அப் துறைகளில், நாடு முழுக்க இந்த யாத்திரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது,” என்றார்.கிளைச் செயலாளர் சர்வஜித் கிருஷ்ணன், முன்னாள் தலைவர் சண்முக வடிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ