உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காலை சிற்றுண்டி திட்டம் பேரூராட்சிகளுக்கும் வேண்டும்

காலை சிற்றுண்டி திட்டம் பேரூராட்சிகளுக்கும் வேண்டும்

அன்னுார்:காலை சிற்றுண்டி திட்டம், பேரூராட்சியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்த பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக அரசு, கடந்த ஆண்டு, அனைத்து அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, காலை சிற்றுண்டி திட்டத்தை துவக்கியது. கடந்த ஜூலை 15ம் தேதி முதல், கிராம ஊராட்சிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகளுக்கு மட்டும் என்னும் அரசின் அறிவிப்பால், அன்னுார் பேரூராட்சியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளான தேசிய வித்யா சாலை மற்றும் சி.எஸ்.ஐ. துவக்க பள்ளி மாணவர்கள், பெற்றோர் மற்றும் நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், ''அன்னுார் பேரூராட்சியில், 120க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியில் படித்து வருகின்றனர். பெரும்பாலும் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பெற்றோர் கூலித் தொழிலாளிகள். கிராம ஊராட்சியில் மட்டும், அரசு உதவி பெறும் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பேரூராட்சியில் உள்ள பள்ளிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பேரூராட்சியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்க வேண்டும்,'' என்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படாததால் பல ஆயிரம் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை