இசை தமிழ் சங்க 25வது ஆண்டு விழா ஆடல், பாடலில் அசத்திய குழந்தைகள்
பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் இசைத் தமிழ் சங்கத்தின், 25வது ஆண்டு விழா நடந்தது.பெரியநாயக்கன்பாளையம் இசை தமிழ் சங்க ஆண்டு விழாவை ஒட்டி, ஜோதிபுரம் பயனீர் கலை, அறிவியல் கல்லுாரியில், சிறப்பு இசை கச்சேரிகள் நடந்தன. நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் இசை ஆசிரியர் சர்மா, காந்தி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முன்னாள் முதல்வர் சதீஷ்குமார், மிருதங்க வித்வான் குருசாமி முன்னிலை வகித்தனர். உறுப்பினர் விஜயலட்சுமி வெங்கடேசன் குத்துவிளக்கு ஏற்றினார். சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து செயலாளர் சிவாய ராமலிங்கம் விளக்கினார். பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள இசை பள்ளிகளில் படிக்கும், 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாட்டு பாடியும், பரதநாட்டியம் மற்றும் இசை கருவிகளை வாசித்தும், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் விஸ்வ பிரகாஷ், கூடலுார் நகராட்சி தலைவர் அறிவரசு, கவுன்சிலர்கள் பாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், துரை செந்தில் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, குழந்தைகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினர். இசை ஆசிரியர்கள் ஹரி பிரசாத், அமர்நாத், வாத்திய கலைஞர்கள் முருகானந்தம், ஈஸ்வரன், சுரேந்திரன், முருகன், ராகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சங்க துணைத் தலைவர் வெங்கடேசன் நன்றி கூறினார்.