உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாராயணகுரு கல்லுாரியில் ஸ்போர்ட்ஸ் கோட்டா தேர்வு 

நாராயணகுரு கல்லுாரியில் ஸ்போர்ட்ஸ் கோட்டா தேர்வு 

கோவை;நாராயணகுரு கல்லுாரி சார்பில் மாணவர்களுக்கான, 'ஸ்போர்ட்ஸ் கோட்டா' தேர்வு, வரும், 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் திறைமையான விளையாட்டு வீரர் - வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில், சிறந்த விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து, கல்வி மற்றும் விடுதி கட்டணத்தில் சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இந்நிலையில், க.க .சாவடி நாராயணகுரு கலை அறிவியல் கல்லுாரியில், கால்பந்து, கபடி, கூடைப்பந்து, தடகளம், டேக்வாண்டோ உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கான தேர்வு நடக்கிறது. இதில், தேர்வு செய்யப்படும் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு கல்வி மற்றும் விடுதி கட்டணத்தில், 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சலுகைகள் வழங்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு 70109 47227, 88527 21315 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை