உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொள்ளாச்சி போலீஸ் ஸ்டேஷனில் போதை ஆசாமி ரகளை

பொள்ளாச்சி போலீஸ் ஸ்டேஷனில் போதை ஆசாமி ரகளை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, சிறுமியிடம் தவறாக பேசிய போதை ஆசாமியை போலீசார் கைது செய்து மகாலிங்கபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தபோது, அவர், ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பொள்ளாச்சியில் உள்ள ஒரு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பெற்றோர் வருகைக்காக காத்திருந்த சிறுமியிடம், போதையில் இருந்த நபர், தவறாக பேசியதாக தெரிகிறது. இதை கண்ட பள்ளி வாட்ச்மேன், அந்த நபரிடம் நீ யார் என கேட்ட போது, சிறுமியின் மாமா என அந்த நபர் கூறியுள்ளார். இதற்கு சிறுமி, இவர் யார் என தெரியவில்லை என, கூறியுள்ளார்.இது குறித்து தகவல் அறிந்த மகாலிங்கபுரம் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று அந்த போதை ஆசாமியை, ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். போதையில் இருந்த அவர், சட்டையை கழற்றி அரைகுறை ஆடையுடன் ரகளையில் ஈடுபட்டார். என்னை அடிங்க... யாராலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது... என போலீசாருக்கு சவால் விட்டுள்ளார்.கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் துாக்கி வீசியதுடன், அணிந்திருந்த பேன்ட்டையும் கழற்ற முயன்றார்.சுதாரித்துக்கொண்ட போலீசார், அலப்பறை செய்த வாலிபரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.விசாரணையில், காங்கேயத்தை சேர்ந்த பிரியாணி மாஸ்டர் மணிகண்டன்,43, ரகளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. சிறுமியிடம் தவறாக பேசிய அவர் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ