உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் பல்கலையில் தேசிய நுாலகர் தினவிழா

வேளாண் பல்கலையில் தேசிய நுாலகர் தினவிழா

கோவை : தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர்கள் நல மையம் சார்பில், தேசிய நுாலகர் தினவிழா கொண்டாட்டம், பல்கலை அரங்கில் நடந்தது.இந்திய நுாலக தந்தையான ரங்கநாதன் பிறந்த தினமான, ஆக., 12ம் நாள், தேசிய நுாலகர் தினவிழா கொண்டாடப்படுகிறது. மாணவர்கள் மத்தியில், நுாலக வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு போட்டிகள் அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. எஸ்.என்.வி. குளோபல் பள்ளி முதல்வர் சாம்சன், டீன் மரகதம், நுாலக பொறுப்பாளர் செல்லமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ