உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய டேக்வாண்டோ: கோவைக்கு பதக்க மழை

தேசிய டேக்வாண்டோ: கோவைக்கு பதக்க மழை

கோவை : சேலத்தில் நடந்த தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் கோவை மாணவர்கள் பல்வேறு பதக்கங்களை வென்றனர்.இந்திய டேக்வாண்டோ பெடரேஷன் சார்பில் 3வது ஓபன் தேசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் சேலத்தில் உள்ள மகாத்மா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இப்போட்டியில் 34 மாநில அணிகள், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட அணிகளை சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இதில், கலர் பெல்ட் மற்றும் பொது பிரிவில் சண்டை மற்றும் பூம்சே போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் தமிழக அணி சார்பில் 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதில் கோவை மாவட்ட ஸ்போர்ட்ஸ் டேக்வாண்டோ சங்கத்தை சேர்ந்த 73 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.கலர் பெல்ட் பிரிவு சண்டையில் கோவை மாணவர்கள் 13 தங்கம், 13 வெள்ளி மற்றும் 29 வெண்கலம் வென்றனர். பூம்சே போட்டியில் 5 தங்கம், 5 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் வென்றனர். இதேபோல் பொதுப்பிரிவு சண்டையில் 5 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலமும், பூம்சேவில் 8 தங்கம், 8 வெள்ளி மற்றும் 2 வெண்கலமும் வென்றனர். இதன் மூலம், தேசிய போட்டியில், மொத்தமாக 98 பதக்கங்கள் வென்றனர்.பதக்கம் வென்ற மாண வர்களை கோவை மாவட்ட ஸ்போர்ட்ஸ் டேக்வாண்டோ சங்க தலைவர் லட்சுமணநாராயணன், செயலாளர் சிஜூகுமார், பொருளாளர் சுரேஷ் கனி ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி