உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வடவள்ளி மாநகராட்சி பள்ளியில் மார்ச்சில் இயற்கை சந்தை கண்காட்சி

வடவள்ளி மாநகராட்சி பள்ளியில் மார்ச்சில் இயற்கை சந்தை கண்காட்சி

கோவை; மகளிர் திட்டம் சார்பில் வடவள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இயற்கை சந்தை கண்காட்சி நடக்கிறது. இதில் பங்கேற்க கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழகம் முழுக்க உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த, மகளிர் திட்டம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, இயற்கை சந்தை கண்காட்சி, கோவை வடவள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மார்ச் 1 காலை 8:00 முதல் 1:00 மணி வரை நடக்கிறது. மகளிர் விவசாயிகளை ஒருங்கிணைத்து, இயற்கை முறையில் விளைவித்த காய்கறி, பழவகைகள், கீரைகள், மூலிகை வகைகள், வாழைப்பழம், வாழைப்பூ, பாரம்பரிய அரிசி உள்ளிட்டவை விற்பனை செய்ய, இச்சந்தையில் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.அனைத்து மக்களும் இயற்கை சந்தை கண்காட்சியில் பங்கேற்று பயனடைய, கலெக்டர் பவன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ