உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாயக்கன்பாளையம் ஊராட்சி இரண்டாக பிரிப்பு

நாயக்கன்பாளையம் ஊராட்சி இரண்டாக பிரிப்பு

பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையம் ஊராட்சி இரண்டாக பிரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாயக்கன்பாளையம் ஊராட்சி கோவனூர், நாயக்கன்பாளையம், பாலமலை, ராயர் ஊத்துப்பதி, திருமாலுார், பாலமலை உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நாயக்கன்பாளையம் ஊராட்சி அருகே உள்ள கூடலுார் நகராட்சியுடன் இணைக்க மறுப்பு தெரிவித்து, நாயக்கன்பாளையம் ஊராட்சி மன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.இந்நிலையில், நாயக்கன்பாளையம் ஊராட்சியை இரண்டாக பிரித்து தீர்மானம் நிறைவேற்ற, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதை அடுத்து கோவனுார், திருமாலுார், ராயர் ஊத்துப்பதி பாலமலையில் உள்ள மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமங்கள் உள்ளிட்டவைகளை ஒன்றாக இணைத்து கோவனுார் ஊராட்சி எனவும், நாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள பகுதிகளை இணைத்து நாயக்கன்பாளையம் ஊராட்சி எனவும் பிரித்து தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 2025 ஜனவரி மாதம் ஊராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவடைவதை ஒட்டி நாயக்கன்பாளையம் ஊராட்சியை கூடலுார் நகராட்சியுடன் இணைக்கலாம். தற்போது, 27 வார்டுகள் உள்ள கூடலுார் நகராட்சி மேலும், 4 வார்டுகள் கூடுதலாக இணைக்கப்பட்டு, 31 வார்டுகளாக மாற்றலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ