உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய ஐபோன் பழுதானதால் பணத்தை திருப்பி தர உத்தரவு

புதிய ஐபோன் பழுதானதால் பணத்தை திருப்பி தர உத்தரவு

கோவை : புதிதாக வாங்கிய ஐபோன் பழுதானதால், அதற்கான முழு தொகையை திருப்பி கொடுக்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.பீளமேடு, பாரதி காலனியை சேர்ந்த சவுந்திரராஜன், அவினாசி ரோடு, பன்மாலிலுள்ள ஷோரூமில், கடந்த 2018, ஜூன், 22ல், 87,749 ரூபாய்க்கு ஐபோன் வாங்கினார். மொபைல் போனை பயன்படுத்திய ஒரு மாதத்தில் 'டிஸ்பிளே' பழுதானது. சர்வீஸ் சென்டரில் பழுது நீக்க கொடுத்து மூன்று மாதங்களாகியும் திருப்பி கொடுக்காமல், உதிரிபாகம் கிடைக்கவில்லை என்று கூறி தாமதம் செய்தனர்.அதன்பிறகு, புதிய உதிரிபாகத்திற்கு கூடுதலாக 37,656 ரூபாய் செலுத்துமாறு இ-மெயில் அனுப்பினர். இதனால்,மொபைல் போனை திருப்பி வாங்கவில்லை.பாதிக்கப்பட்ட சவுந்திரராஜன், கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். 'விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள், 'ரிலையன்ஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மொபைல் போன் வாங்கிய தொகை, 87,749 ரூபாயை மனுதாரருக்கு திருப்பி செலுத்த வேண்டும், மன உளச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை