உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரமணி மோட்டார்சில் புதிய மகேந்திரா எலக்ட்ரிக் கார்

ரமணி மோட்டார்சில் புதிய மகேந்திரா எலக்ட்ரிக் கார்

கோவை, : மேட்டுப்பாளையம் ரோடு, ரமணி மகேந்திரா ஷோரூமில் புதிய எலக்ட்ரிக் எஸ்.யூ.வி., அறிமுக விழா நடந்தது. விழாவிற்கு ரமணி மோட்டார்சின் நிர்வாக இயக்குனர்கள் சுதர்சன், சசிகுமார், சங்கரமூர்த்தி மற்றும் வாடிக்கையாளர் விக்ரம் ஆகியோர் பங்கேற்றனர்.புதிய எலக்ட்ரிக் எஸ்.யூ.வி.,ற்குகான முன்பதிவு வரும் பிப்.,14 முதல் துவங்குகிறது. பி.இ., 6 மற்றும் எக்ஸ்.இ.வி., 9 இ மாடல்களில், ஒன்பது வகைகள் உள்ளன. பேக் 1 பிஇ 6 ஆரம்ப விலை, ரூ.18.90 லட்சம் முதலும், எக்ஸ்.இ.வி., 9 இ, ரூ. 21.90 லட்சம் முதல் ஆரம்பமாகிறது. பேக் 3 மாடல்கள் மார்ச் மாதத்தில் இருந்து டெலிவரி துவங்குகிறது. பேக்1 மற்றும் பேக் 2 மாடல் ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவுகள் தற்போது www. mahindraelectricsuv.comஎன்ற இணையதளத்தில் துவங்கியுள்ளன. டெஸ்ட்ரைவ் மற்றும் விவரங்களுக்கு 95009 89514 என்ற எண்ணில் ஷோரூமை அணுகவும் என நிர்வாக இயக்குனர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ